deepamnews
இலங்கை

அரச தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு – உறுதிப்படுத்தினார் சஜித் பிரேமதாச

எதிர்வரும் காலப்பகுதியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையுமானால், எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்காக காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? – தமிழகத் தலைவர்கள் பதில் கூற வேண்டும்

videodeepam

அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை – மஹிந்த அமரவீர தெரிவிப்பு

videodeepam

ஜெனிவாவில் இலங்கைக்கு 11 வாக்குகளே கிடைக்கும்

videodeepam