deepamnews
இலங்கை

இலங்கையில் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் இருக்குமா? – சி.வி.கே. சிவஞானம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் மாகாணசபை முறைமை தொடர்ந்தும் இருக்கும் என்பதில் சந்தேகம் காணப்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களின் முழுமையான அரசியல் தீர்வாக அமையாது எனவும் அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன்,  இந்த திருத்தத்துக்கு அமைவாக வடக்கு, கிழக்கு நிர்வாகம் முழுமையாக தமிழில் இடம்பெறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது அதிலிருந்து விலகியுள்ளதாகவும் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் என்பது அரசியலுக்கு அப்பால் அதிகாரங்களை பகிர்வதற்கான ஒரு கட்டமைப்பு என்பதுடன் இதனை ஓர் அரசியல் தீர்வாக கருதமுடியாது என்றும் இது நிர்வாகம் சார்ந்தது எனவும் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு

videodeepam

மாடுகளை திருடிச் சென்றவர் கைது!

videodeepam

காலிமுகத்திடல் போராட்டதில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் – நாமல்

videodeepam