உயர் நீதிமன்றம் சுயாதீன நிறுவனம் என்பதால், அதனூடாக வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பில், ஏனைய தரப்பினருக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிக்கை ஒன்றினூடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஊடாக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் எந்த தரப்பினரதும் சிறப்புரிமை மீறப்படவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் ஊடாக நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.