deepamnews
இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது திறைசேரி பத்திரங்கள் தொடர்பில் மாத்திரம் நடவடிக்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ள திறைசேரி பத்திரங்கள் தொடர்பாக மாத்திரம் நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தரப்பினர் கொள்வனவு செய்துள்ள திறைசேரி பத்திரங்கள், முறிகள் தொடர்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மீள் செலுத்தும் நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டியது, கடன் வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள இலக்குகளில் ஒன்றாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Related posts

தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு.

videodeepam

பிக்குகள் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்.

videodeepam

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – பிரதமர்

videodeepam