தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும், என மத்திய வெளியுறவு அமைச்சரிடம், தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மு.க.ஸ்டாலின் எஸ். ஜெய்ஷங்கருக்கு முதல் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்.
அத்துடன், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 கடற்றொழிலாளர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.