போரில் ரஷ்ய வீரர்கள் பலியாகும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வருவதால், ரஷ்யாவின் கிழக்கு இராணுவ பிரிவின் உயர்மட்ட ஜெனரல் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார்.
பிரித்தானிய உளவுத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய வீரர்களின் கடுமையான உயிரிழப்பை தொடர்ந்து உக்ரைனில் ரஷ்ய படைகளை வழி நடத்தும் மூத்த ஜெனரல்களில் ஒருவரை புடின் பதவி நீக்கம் செய்துள்ளார் என பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கிழக்குப் படைகளின் (EGF) தலைமைப் பொறுப்பில் இருந்து, கர்னல் ஜெனரல் ருஸ்டம் முராடோவ்( Rustam Muradov) என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த தகவலின் படி,ஜனாதிபதி புடினின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கிழக்கு படைகளின் மோசமான தாக்குதல் மற்றும் வுஹ்லேதார்(Vuhledar) நகரை கைப்பற்றுவதில் மீண்டும் மீண்டும் ரஷ்ய படைகள் சந்திக்கும் தோல்வியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் முக்கிய காரணம் காரணமாக சொல்லப்படுகிறது.
மூத்த ஜெனரலின் சொந்த துருப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, ரஷ்யா முழுவதும் தீவிரமான பொது விமர்சனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் டான்பாஸில் ரஷ்யா தொடர்ந்து தனது நோக்கங்களை அடைய தவறினால் இன்னும் அதிகமான பணிநீக்கங்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.