சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
பேரூந்துகளில் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குணசிங்கபுர – பெஸ்டியன் மாவத்தை பேரூந்து தரிப்பிடங்களுக்குள் யாசகர்கள் செல்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பேரூந்துகளில் நடமாடும் வர்த்தகத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என பேரூந்து பணிக்குழாமினருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.