deepamnews
இலங்கை

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் பலி

மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  கும்பலைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களிடமிருந்து  ரீ-56 ரக துப்பாக்கியொன்றும், போர 12 துப்பாக்கியொன்றும், ரம்போ ரக கத்தி ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொடை காவல்துறையினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து கூற எரிக் சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – ரெலோ அறிக்கை

videodeepam

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

videodeepam

சிங்கள பௌத்த பேரினவாத அரசு  தமிழ் மக்களை மோசமாக சீண்டிக் கொள்கிறார்கள் – கனகரத்தினம் சுகாஸ் காட்டம்

videodeepam