நாட்டின் நிலைமை சரியாக உள்ளதாக கூறும் அதிகாரிகள் ஏசி அறைகளை விட்டு வெளியே வந்து நாட்டின் நிலைமையை ஆராய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சக்வல வேலைத்திட்டத்தின் 27 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.