எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தமிழ் சிங்கள வருடத்தின் அடுத்த இரண்டு வாரங்கள் இந்த நாட்டின் அரசியலில் மிக முக்கியமான இரண்டு வாரங்கள். ஏனென்றால் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடையில் பல விடயங்கள் நடக்கலாம் என்பதை நாம் பார்க்க முடியும்.
எதிர்க்கட்சிகள் எடுத்தால் நல்லதொரு முடிவை யார் எடுத்தாலும் சரி. ஏதாவது நல்லது, நாங்கள் அதை ஆதரிப்போம்.” என்றார்.