deepamnews
இலங்கை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம்  தமிழ், சிங்கள புத்தாண்டு வந்தபோது, நாம் அனைவரும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்ததுடன், ஆண்டைக் கொண்டாடுவதைத் தவிர்த்து, அன்றாட வாழ்க்கையைப் பேணுவதற்கான போராட்டத்தின் மத்தியில் இருந்தோம்.

எனினும் இந்த புத்தாண்டு நமக்கெல்லாம் ஒருவித ஆறுதலான சூழலுடன் வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் புத்தாண்டை இன்றைய நாளை விடவும் சிறப்பாகவும் சுபீட்சமாகவும் மாற்ற நாம் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறினால் மாத்திரமே இந்த ஆசையை நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கட்சி, நிற, இன, மத வேறுபாடின்றி புதிய பார்வையுடன் நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு இந்த புத்தாண்டு மட்டுமல்ல எதிர்காலமும் சுபமாக அமையும் என ஜனாதிபதி  மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் 800 ரூபாவுக்காக இ.போ.ச. பஸ் சாரதி அடித்துப் படுகொலை.

videodeepam

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கவில்லை

videodeepam

துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்

videodeepam