deepamnews
இலங்கை

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இணை அனுசரணை வழங்கவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில், இணைய அனுசரணை வழங்கப் போவதில்லை என்று துருக்கியே தெரிவித்துள்ளது.

ஜெனிவா தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள அனுசரணையாளர்களின் பட்டியல் சரியானதல்ல என்று, இலங்கைக்கான துர்க்கியே தூதுவர், டிமேட் செகெர்சியோக்லு (Demet Şekercioğlu) தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலத்திலோ அல்லது நடந்து கொண்டிருக்கும் 51வது கூட்டத்தொடரிலோ,  இலங்கை தொடர்பான எந்தவொரு தீர்மானத்திற்கும் துருக்கியே இணை அனுசரணை வழங்கவில்லை என்று அந்த நாட்டின் தூதுவர், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைவில் இணை அனுசரணை நாடுகளின் பட்டியலில் துருக்கியே தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

இலங்கையில் 75 இலட்சம் மக்களின் மோசமான நிலை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

videodeepam

பாண் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை- வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

videodeepam