deepamnews
இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் உலங்குவானூர்தியை அறிமுகப்படுத்தியது இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் உலங்குவானூர்தியை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஹிந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் நிறுவனம் இந்த இலகு ரக உலங்குவானூர்திகளை தயாரித்துள்ளது..

எதிரி நாட்டு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட இது,  எல்லைப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த உலங்குவானூர்திகளில் இரவிலும் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்த முடியும்.

அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்த முடியும் என்றும், தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலகுரக உலங்குவானூர்திகளை இந்திய விமானப்படையில் அதிகாரபூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி ஜோத்பூரில் நேற்று நடந்தது.

Related posts

ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்

videodeepam

திமுக அங்கம் வகித்த மத்திய அரசால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை – ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு

videodeepam

ஜி 20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

videodeepam