deepamnews
இந்தியா

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி

பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ் 50,000 ரூபா சொந்த பிணையிலும், 50,000 ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணையின் போது, ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கைதுகளின் போது தேடி மற்றும் தெரிவு செய்தல் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பொலிஸாரை எச்சரித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமுலாக்கத்துறை விசாரித்திருந்தது.

இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயருடன் அமுலாக்கத்துறை பணியகம் இணைந்திருந்தது.

இந்த வழக்கில் முக்கிய சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றமை தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக்கொண்டதாக அமுலாக்கப் பிரிவு ஜாக்குலின் மீது குற்றம்சாட்டியிருந்தது.

மேலும்,  சுகேஷிடமிருந்து 10 கோடி ரூபா மதிப்புள்ள பரிசுப்பொருட்களை பெற்றமையும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இன்று 15 ஆம் திகதி வரை முன்பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மனு நேற்று  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழக யாசகர் இலங்கைக்கு அளித்த இறுதி நன்கொடை

videodeepam

ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து..! அதிர்ச்சியில் மக்கள்..!

videodeepam

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை

videodeepam