deepamnews
இந்தியா

தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜ.க. வெல்வது கடினம் என்கிறார் ராகுல் காந்தி

தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டால், பா.ஜ.க. தேர்தல்களில் வெல்வது கடினமாகி விடும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது தலைநகர் டெல்லிக்கு சென்று அடைந்துள்ள இந்த யாத்திரைக்கு, குளிர்காலத்தையொட்டி இடைவேளை விடப்பட்டுள்ளது. மீண்டும் 3-ந் தேதி காஷ்மீரை நோக்கி நடைப்பயணம் தொடர உள்ளது.

இந்த நிலையில் ராகுல் காந்தி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.இதன்போது அவர் தெரிவிக்கையில்,

நான் மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரை, மக்களுக்கு ஒரு புதிய வேலை மற்றும் சிந்தனை முறையை முன்வைப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்குப்பார்வையோடு, திறம்பட ஒன்றுபட்டு நிற்கிறபோது, தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது பா.ஜ.க.வுக்கு கடினமாகி விடும். ஆனால் எதிர்க்கட்சிகள் திறம்பட ஒருங்கிணைய வேண்டும். மாற்றுகொள்கைகளுடன் மக்களிடம் செல்ல வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்புணர்வு இருக்கிறது. இனியும் இங்கே தந்திர முறையிலான அரசியல் சண்டை இருக்காது. அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சித்தராமையா- டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி – முதலமைச்சர் பதவி இழுபறி

videodeepam

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு

videodeepam

மேலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின்போது ஜல்லிக்கட்டுக் காளை திமிறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

videodeepam