deepamnews
சர்வதேசம்

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் நித்திய இளைப்பாறினார்

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் (6 ஆவது ஆசிர்வாதப்பர்) தனது 95 ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார்.

உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் வத்திகான் இல்லத்தில்  நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 16 ஆவது ஆசிர்வாதப்பர், பாப்பரசராக இறைபணியில் ஈடுபட்டிருந்தார்.

2013 இல் அவர் பாப்பரசர் நிலையில் இருந்து தாமாக பதவி விலகினார்.  1415 ஆண் ஆண்டில் 12 ஆம் கிரிகோரிக்கு பின்னர் பாப்பரசர் பதவியிலிருந்து விலகியவராக முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் வரலாற்றில் பதிவானார்.

480 ஆண்டுகளின் பின்னர் ஜெர்மனியில் இருந்து  தெரிவு செய்யப்பட்ட முதலாவது பாப்பரசராகவும் அவர் பதிவானார்.

பெனடிக்ட் தனது இறுதிக் காலத்தை வத்திக்கானின் சுவர்களுக்குள் உள்ள மேட்டர் எக்லேசியா (Mater Ecclesiae)மடாலயத்தில் கழித்தார்.

அவருக்குப் பின் வந்த பாப்பரசர் பிரான்சிஸ், அவரை அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்தார்.

பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 29 ஆம் திகதியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரின்  திருவுடல் எதிர்வரும் ஜனவரி 2  ஆம் திகதி   புனித பீட்டர் பெசிலிக்கா  தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பதவி நீக்கம் – உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை

videodeepam

பிரான்ஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்  – மன்னர் சார்லஸின் பயணத்தில் இரத்து  

videodeepam

சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

videodeepam