deepamnews
சர்வதேசம்

இத்தாலியின் பிரதமராகிறார் இரும்புப் பெண் ஜோர்ஜியா மெலோனி

இத்தாலியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜோர்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதையடுத்து இத்தாலியின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி கடும் பொருளாதார நெருக்கடியினால்,  ஜூலை மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது.

வாக்கு பதிவு நிறைவுற்றதும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டதில், இத்தாலிய சகோதர்கள் கட்சி தலைவர் ஜோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து, ஜோர்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற போதும், முறையான அறிவிப்பு வெளியாக ஒரு சில நாட்களாகலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

உக்ரைனின் 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!

videodeepam

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கரடியின் முக அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

videodeepam

பாகிஸ்தானில் பொருட்கள் விலை அதிகரிப்பு – வர்த்தகர்கள் கடை அடைப்பு போராட்டம்!

videodeepam