deepamnews
இந்தியா

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலப் பொருட்கள் மீட்பு

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அகழாய்வு பணியில் இதுவரை 85-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க காதணி, தங்க நெற்றிப் பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள் என ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் அகழாய்வு பணியில் வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடிக் கொண்ட கத்தி, இரும்பு வாள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு சார்பில் நடைபெறும் அகழாய்வு பணி இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறவுள்ளது.

Related posts

ஒடிசாவில் மீண்டும் தடம் புரண்டு ரயில் விபத்து..! அதிர்ச்சியில் மக்கள்..!

videodeepam

இந்திய ஊடகவியலாளர்களே இல்லாத நாடாக மாறுகிறது சீனா

videodeepam

உலகின் மிகச் சிறந்த  தலைவர் பிரபாகரன் தான்! – நடிகை கஸ்தூரி புகழராம்

videodeepam