deepamnews
இலங்கை

ஜெனிவாவில் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது இலங்கை மீதான தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்,  இலங்கை தொடர்பான  தீர்மானம்  மீது ஒக்டோபர் 6ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்மானங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், அனுசரணை நாடுகள் குழு இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்பாக, செப்டம்பர் 23 ஆம் திகதி முறைசாரா கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

அதையடுத்து, பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை குறித்த தீர்மானத்தின் இறுதி வரைவு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வாக்கெடுப்புக்கு முன்னதாக இறுதிநேர திருத்தங்கள் செய்யப்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி இணைந்து புதிய கூட்டணி

videodeepam

நவாலியில் வாள்வெட்டு – இருவர் மருத்துவமனையில் அனுமதிப்பு

videodeepam

கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்கள் கைது!

videodeepam