deepamnews
இலங்கை

வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வு.

வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன்  அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் ராமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள்,  தென்னை உற்ப்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னைங்கன்றுகளும், உள்ளீடுகளும் வழங்கப்பட்டது.

இதன் பொது அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவிக்கையில், 

இன்று இரண்டு வருடங்களில் 3.5 மில்லியன் தென்னைகளை  நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  தெரிவித்தரர்.

இதன் மூலம் வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்படும் என நம்புவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தென்னை செய்கையில்  சிறப்பாக மேற்கொண்ட செய்கையாளர்களிற்கு  நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் சிறந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு  ரூபா  இரண்டு லச்சம் காசோலைகளும் வழங்கப்படது.

தொடர்ந்து இன்றைய நாளின் நினைவாக அமச்சரின் கரங்களால் தென்ங்கன்றும் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.   

Related posts

தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

videodeepam

முகமாலையில் இடம்பெற்ற கோர விபத்து

videodeepam

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

videodeepam