deepamnews
இலங்கை

நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு

 

பண்டிகைக் காலம் முடிந்து வரும் நாட்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும்.

நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய காலநிலை மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை.

videodeepam

கல்வி அமைச்சின் அறிவிப்பின் பேரில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு.

videodeepam

மிளகாய் தூளில் 50 சதவீத கலப்படம்

videodeepam