deepamnews
இலங்கை

கல்வி அமைச்சின் அறிவிப்பின் பேரில் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு.

தூய்மையான காற்றானது ஒவ்வொரு உயிரினத்தினதும் அடிப்படைத் தேவையாகும்.இன்று வளி மாசடைவதினால் உலக சனத்தொகையின் 99% இற்கு மேலானவர்கள் பாதுகாப்பற்ற வளியையே சுவாசிப்கதாக உலக சுகாதார நிறுவன அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 7 மில்லியன் மக்கள் வளி மாசடைவதால் உயிரிழப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை மனங்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபையால் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதப் 7 ஆம் திகதி முதல் நீல வானுக்கான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

இதற்கமைவாக கல்வி அமைச்சு இம்மாதம் இடம்பெறும் சர்வதேச தினங்களான தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் ( செப்டெம்பர்-7), உலக ஓசோன் தினம் (செப்டெம்பர்-16)

ஆகியவற்றை பாடசாலைகளில் கொண்டாடி மாணவர் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைவாக வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இத்தினங்களைக் கொண்டாடுவதற்கான வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி யா/ வட்டு இந்துக் கல்லூரியிலும் பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்களால் இன்றயதினம் ( செப்டெம்பர் 7) இத்தினத்தை பற்றியும், தூய வளியை பெறல் தொடர்பாகவும் சகல மாணவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல  யா/பிரான்பற்று கலைமள் வித்தியாலயத்தில், புவியியல் பாட ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் தூய்மையான காற்று தொடர்பான சர்வதேச தினம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்தினார்.

Related posts

கல்மடு விவசாயிகளிற்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதி.

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு

videodeepam