deepamnews
இலங்கை

கச்சத்தீவு புத்தர் சிலை அகற்றப்பட்டது: ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கச்சத்தீவுபுனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சத்தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவணம் செய்யுமாறு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மாதம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சத்தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

Related posts

போலித் தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான அரசியல் தலைமைத்துவம் நாட்டில் இல்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு

videodeepam

சட்டவிரோத மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

videodeepam