deepamnews
இலங்கை

குருந்தூர் சிவன் கோவில் வழக்கு: தென்கைலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் நிலையில், கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுவதாக தவத்திரு தென்கைலை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, பிடுங்ககப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீள  பெற வழிவகை கோரல், 2.அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை தாரா வகை
சிவலிங்கம் ஏன் மேலதிக ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்புதல், அதனை சேதப்படுத்தி 3 துண்டாக உடைத்து சட்டவிரோதமாக அமைத்த தாதுகோப உச்சியில் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திடம் விளக்கம் கோரல் போன்ற முக்கிய சமர்ப்பணங்களை செய்தால் நன்று என தவத்திரு தென்கைலை ஆதீனம் சுட்டிக்காட்டியுள்ளது

இதேவேளை, குறித்த விடயங்களை நாடாளுமன்றில் முல்லைத்தீவு தொகுதி, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழமாக வலியுறுத்தி அரசிடம் உடனடி தீர்வை கோர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நீதிமன்றிற்கும் பின்னர் களத்தரிசிப்பிற்கும்பும் மேற்கொண்டு அந்த பிரதேச முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற,  மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் வலுச்சேர்க்குமாறும் கேட்டு கொள்வதாக திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வேலைநிறுத்த நடவடிக்கையில் மாபெரும் வெற்றி – தேசிய தொழிற்சங்க தலைவர் லால்காந்த தெரிவிப்பு

videodeepam

15 வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு

videodeepam

உயர்தர மாணவி குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

videodeepam