இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ரோயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் 178வது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச ஆசிய சங்கம் என்பனவற்றுடன் இணைந்து இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் என்றும், அதற்கான சட்ட வரைவை விரைவில் இறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.