கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடலை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நிறுத்த சொன்னது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக- பாஜக இடைய கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியும் விமர்சித்தும் வருகின்றனர். எதோ ஒரு காரணம் கிடைக்காத என இரு தரப்பும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் இதற்கு ஏற்றார் போல் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட தமிழ் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திமுக எம்பி கனிமொழி கருணாநிதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.