deepamnews
இந்தியா

குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்கும் அரசியல் கட்சிகள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி தெரிவிப்பு

எந்தவொரு நாடும் குறுக்குவழிகளுடன் இயங்க முடியாது, நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நிரந்தர தீர்வு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ.1575 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டு வரும் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர் பேசிய பிரதமர், “மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் இந்த சிறப்பான நாள் மக்களின் வாழ்க்கையை மாற்றும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக இன்று பதினொரு புதிய திட்டங்கள் உருவாகி வருகிறது, இது புதிய உயரங்களை அடையவும், புதிய திசையை வழங்கவும் உதவும்.

இந்தியாவில் குறுக்குவழி அரசியல் தோன்றுவது சரியல்ல. அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைக்கும் நோக்கிலும் குறுக்குவழிகளை கடைப்பிடித்தும் உழைத்து சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் வேளையில், சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க விரும்புகின்றன. நான்காவது தொழில் புரட்சிக்கான நேரம் வரும்போது, அதை இந்தியா தவறவிட முடியாது. எந்தவொரு நாடும் குறுக்குவழிகளுடன் இயங்க முடியாது, நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நிரந்தர தீர்வு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. ‘குறைவாக சம்பாதிப்பது, அதிகம் செலவு செய்வது’ என்ற கொள்கையில் செயல்படும் சுயநல அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

நாட்டில் நிலையான வளர்ச்சி மற்றும் நிலையான தீர்வுகளுக்கான முயற்சிகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. குஜராத் தேர்தல் முடிவுகள் அதன் விளைவுதான் என்றும், நிரந்தர வளர்ச்சி மற்றும் நிரந்தர தீர்வுக்கான பொருளாதாரக் கொள்கை அவசியம்” என்று பேசினார்.

Related posts

கடல் கடந்து கரம் பிடித்த காதலி. கடலூரில் திருமணம்

videodeepam

ஒடிசா புகையிரத விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து திடீரென வந்த துர்நாற்றம்- அச்சத்தில் மக்கள்!

videodeepam

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்துவிழுந்து  விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை  140 ஆக உயர்வு

videodeepam