தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானங்களை மேற்கொள்ளும் போது தற்காலத்தை மாத்திரம் கவனத்திற்கொள்ளாது எதிர்வரும் 25 ஆண்டுகளையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்வதற்காக நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவில் இளைஞர்களை நியமிப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளேன்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கு அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக நாட்டைத் தயார்படுத்த தாம் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு 01.
தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2023ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை அதில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.