ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு நேற்று பொரளை – கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றதுடன், குறித்த மாநாட்டில் அவர் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெற்றது.
இதற்காக, கொழும்பு – பொரளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பேரணியாக கெம்பல் மைதானத்தை நோக்கி சென்றிருந்தனர்.
இந்த மாநாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துரைத்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியினை அழிப்பதற்கான சூழ்ச்சி இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.