deepamnews
இலங்கை

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 29,000ஐ தாண்டியுள்ளதாகவும்  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது 49% ஆகும்.

இதேவேளை, 15 மாவட்டங்களில் உள்ள 55 வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் வலியுறுத்தி கடந்த 26ஆம் திகதி விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து மேல்மாகாணத்தில் உள்ள வீடுகள் இன்று முதல் சோதனையிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் வளாகங்களை பராமரிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

சீனாவின் பதிலிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தங்கியுள்ளது – நிதி அமைச்சு அறிவிப்பு

videodeepam

கல்வியங்காடு பழக்கடை வியாபாரி கடத்தல் – அதிரடியாக அறுவர் கைது!

videodeepam

திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இலங்கை இந்திய நட்புறவு அக்கடமிக்கு அடிக்கல்

videodeepam