deepamnews
இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

 சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவ்வாறு வழங்குவதற்காக 40,000 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும் அதற்காக சுமார் 61,600 மெட்ரிக் தொன் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலுவலக மலசலகூடத்தில் சடலம் மீட்ப்பு.

videodeepam

இலங்கைக்காக உலக மக்களின் உதவி வேண்டி நிதி சேகரிப்பு தளத்தை ஐ.நா. ஆரம்பித்தது

videodeepam

இரண்டு டிப்பர்களை மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்!

videodeepam