deepamnews
இலங்கை

இரண்டு டிப்பர்களை மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்!

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் இன்று (01.09.2023) பறிமுதல் செய்யப்பட்டன.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து  அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்கள், இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், டிப்பர் வாகன சாரதிகளும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தருமபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுகாதாரத்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  அதிர்ச்சித் தகவல்

videodeepam

உடன் நடவடிக்கை எடுங்கள் – அதிபர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

videodeepam

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை

videodeepam