வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் இன்று நள்ளிரவு (07.09.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கிருஷ்ண பகவானுக்கு நடைபெற்ற விஷேட அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தீபபூஜையும் இடம்பெற்றன. இவ் உற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு இ.ரமணிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ண பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிருஷ்ணன் ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பக்த அடியார்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.