deepamnews
இலங்கை

பிரபல சிங்கள சினிமா இயக்குநர் சுமித்ரா பீரிஸ் இன்று  காலை காலமானார்.

இவர் சிங்கள சினிமாவின் தந்தையென வர்ணிக்கப்படும் ஒளிப்பதிவாளர், இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியாவார்.

உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.

அவர் இலங்கையின் முதல் சினிமா படத்தொகுப்பாளரும், நான்காவது திரைப்பட இயக்குனரும் ஆவார்.

கேர்ள்ஸ், கங்கா அத்தாரா, யஹலு யெஹெலி, மாயா, சாகர ஜலய மதி எண்டுவா நும்ப ஹிந்தா, லொகு துவ, துவட மவக மிச, சக்மன் மலுவ, வைஷ்ணாவி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

 சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான OCIC விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Related posts

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்பு – இரண்டு மாதங்களுக்குள் ஒப்பந்தம்

videodeepam

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

videodeepam

ஜனாதிபதி ரணிலே புத்தாண்டு ஆணழகன் என்கிறார் ரங்கே பண்டார  

videodeepam