கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மே தினத்தை முன்னிட்டு உழைத்து தரவேண்டிய தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்து மே தினத்தையொட்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.தமது பிள்ளைகளின் படங்களை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
15 பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அரை மணித்தியாலங்கள் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.