உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு சென்றுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த யூ.எல். 402 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் அவர்கள் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.