ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்த வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது நாள் நிறைவு நிகழ்வான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நேரடி நிகழ்ச்சி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவையும் மான் கி பாத்தின் நேரடி நிகழ்வை ஒளிபரப்பின.
மான் கி பாத் நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில் ஏற்றுமதி இலக்குகளை அடைய ஒரே சூத்திரம் “வோக்கல் ஃபார் லோக்கல், லோக்கல் ஃபார் க்ளோபல் எனத் தெரிவித்தார்.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கும் இதே மந்திரம்தான் பொருந்தும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.