deepamnews
இலங்கை

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் –  பரீட்சைகள் திணைக்களம்  அறிவிப்பு

உயர்தர பரீட்சையின்  சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் விரைவாக இணைந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமையினால், விடைத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதுவரை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  – சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

videodeepam

டிசெம்பருக்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமில்லை –  சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

videodeepam

மாணவனை தாக்கிய மகாஜன ஆசிரியர் பொலிசாரால் கைது

videodeepam