deepamnews
இந்தியா

உலக பொருளாதார வளர்ச்சியில் 50 வீத பங்களிப்பை இந்தியா வழங்கும்

நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50 வீத பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம் – ஆசியா மற்றும் பசுபிக்’ தொடர்பான சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8 வீதமாக  இருந்தது. இது நடப்பாண்டில் 4.6 வீதமாக அதிகரிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

மேலும், இந்த வளர்ச்சி பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இரு பெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50 வீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உலக பொருளாதாரத்திற்கு 2023 ஆம் ஆண்டு சவாலானதாகவே இருக்கும் என தெரிகிறது.

பணவியல் கொள்கையில் இறுக்கம், உக்ரைன் போர் ஆகியவை உலக பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் என சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை! – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிப்பு.

videodeepam

தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

videodeepam

நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேரின் விடுதலை கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

videodeepam