deepamnews
இலங்கை

இன்று இலங்கையை தாக்கும் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை..!

வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் இன்றையதினம் சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காணப்படும் எனவும், அது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடலோர பகுதியில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவித்துள்ளனர்.

இதனிடையேய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்
அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியீடு

videodeepam

கேக் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவிப்பு

videodeepam

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam