deepamnews
இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் – அரசாங்கம் உறுதி

நாட்டின் தொழிலாளர் சட்டத்துக்கு உட்பட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவை அமைச்சில் சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண, குறித்த பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Related posts

சிறப்புற நடைபெற்ற முதியோர் தின நிகழ்வுகள்.

videodeepam

தமிழ் மக்களின் நன்மை கருதி மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவிப்பு

videodeepam

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு .

videodeepam