deepamnews
இலங்கை

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு

மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

இதன் கீழ் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகள் உத்தரவாத நடவடிக்கையில் உள்வாங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

2022 பாடசாலை கல்வி ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

videodeepam

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

videodeepam

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

videodeepam