deepamnews
இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் இழைக்கப்படும் அநீதி: எஸ்.எம்.சந்திரசேன வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வுகாண வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஜனாதிபதியை நாங்கள் தெரிவுசெய்திருந்தாலும், பொதுஜன பெரமுனவை முழுமைப்படுத்திய வகையில் அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை. அமைச்சரவை விவகாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் செயற்படுகிறோம்.

69 இலட்சம் மக்களின் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related posts

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளை கண்டுபிடிக்க விசேட சுற்றிவளைப்பு

videodeepam

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 20  கலப்பின சூரிய கிரகணம்

videodeepam

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கூட பிணையுள்ளது, தொல்லியல் சார்ந்த சின்னங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிணை இல்லை – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam