ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலகின் 7 முன்னணி ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் ஜி 7 அரச தலைவர்களின் கூட்டம் ஜப்பானில் நடைபெறுகின்றது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடன் நிலைபேறான தன்மையால் ஏற்பட்டுள்ள சவால்கள் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதாக ஜி7 நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா, பிரான்ஸ் , ஜேர்மன், இத்தாலி, ஐக்கிய இராச்சியம், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியன ஜி 7 நாடுகளாகும்.