deepamnews
சர்வதேசம்

உக்ரைனின் முக்கிய நகரத்தை போராடி கைப்பற்றிய ரஷ்யா!  

உக்ரைனில் மேலும் ஒரு முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த ஆண்டு முதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை 10 மாதம் போராடி முழுவதுமாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது.

பாக்முத் பகுதியில் ரஷ்ய தேசியக்கொடியை வீரர்கள் ஏற்றுவது தொடர்பான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளன.

உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்திருந்த நிலையில் ரஷ்யாவின் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது.

மேலும் போரின் முக்கிய மையமான பாக்முத் நகரில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் இராணுவ செய்தித்தொடர்பாளர் செர்ஹி செரேவதி தெரிவித்துள்ளார்.

Related posts

உக்ரைன் களமுனைக்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள்- வீரர்களுக்கு கடும் பயிற்சி

videodeepam

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

videodeepam

ரஷ்ய தாக்குதலில் அமெரிக்க ஆயுதங்கள்! – சிக்கலை எதிர்நோக்கும் உக்ரைன்

videodeepam