2021ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் நீக்கப்படும் என கூறப்பட்டுள்ள போதிலும் இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கோ, புதிய வாகன அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கோ தடையேற்பட்டுள்ளது.
உயர்ந்த வரி அறிவிட்டதன் பின்னரே, கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, கடந்த காலத்தை காட்டிலும் தற்போதைய நிதியமைச்சரின் ஆட்சிக்காலத்திலேயே மக்கள் பிரதிநிகளின் வரப்பிரசாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.