இலங்கை அரசாங்கம் ஒழுங்குமுறையின் படி பல கடன்களை இன்னும் செலுத்த தொடங்கவில்லை. எனவே முன்னையது போலவே தற்போது பெரியளவில் கடன்களைப் பெற முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதிலும் இலங்கை ஒரு முன்னேற்றத்தை காணவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் செலவுக் குறைப்புக்களை செய்ய முற்படுகின்றது எனவும், இதன் விளைவுகளை இனிவரும் நாட்களில் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வங்கி வட்டி வீதங்கள் அதிகரிப்பு குறித்தும், பொருளாதார நிலை குறித்து இலங்கை அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்கும் ஆபத்தில் இருப்பதாகவும் பேராசிரியர் அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டினார்.