deepamnews
இலங்கை

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும், பூகோள பொருளாதாரம் மற்றும் அரசியல் நடப்பு நிலவரங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சிறந்த திட்டங்களுக்கு அமைய செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை சுபீட்சமானதாக நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

தவறான தீர்மானங்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவதால் பயன் ஏதும் கிடைக்கப் பெறாது.அரசாங்கத்தின் நாளாந்த செயற்பாடுகளையும் நிறைவேற்ற அரசாங்கம் கடன் பெறும் நிலை ஏற்பட்டது.பெற்றுக் கொண்ட கடன் அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி,ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்றது.

அரச கடன்களை மறுசீரமைத்து வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கும்,தற்போதைய நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் துறைசார் கண்காணிப்புக் குழுவுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும் – விஜேதாச ராஜபக்ஷ

videodeepam

13 ஆவது திருத்தத்தை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்: இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதி

videodeepam

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது.

videodeepam