deepamnews
இலங்கை

யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் இன்று முதல் பதவி விலகினார் 

யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவியிலிருந்து விலகுகிறார்.

கடிதம் மூலம் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அவர் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் கடந்த 21ம் திகதி 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்தே   மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இரண்டாவது தடவையாக பாதீட்டுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும், கட்சிகளின் போதுமான ஆதரவு கிடைக்காத நிலையில், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், பதவி விலக தீர்மானித்துள்ளார்.

2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர்.

இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

videodeepam

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா

videodeepam