deepamnews
இலங்கை

கொரோனா தொற்று பரவல் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்றுப் பரவல் அதிக அளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை முறையான பரிசோதனைகளின் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்த வாரத்தில் இலங்கையில் 40-க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் 12 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

கொரோனா தொற்று அதிகம் பதிவாகும் நாடுகளில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், இலங்கையில் எந்தவொரு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என உபுல் ரோஹன குறிப்பிட்டார். 

நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமையில், கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது மரணங்கள் அதிகரித்தாலோ வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளின் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தினார். 

Related posts

நான்கு அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை:  கோப் குழு அழைப்பு

videodeepam

பண்டிகைக் காலங்களில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு

videodeepam

மோசமடையும் இலங்கையின் உணவுப் பற்றாக்குறை – எச்சரிக்கும் சர்வதேச அமைப்பு

videodeepam